இதயத்துக்கு இதமானது பீன்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது பீன்ஸ்
பீன்ஸ் அவரை வகையை சேர்ந்தது. பீன்ஸ் நீரிழிவு மற்றும் இதய வியாதியை கட்டுப்படுத்தும் பீன்ஸ் உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் அது கொழுப்பை குறைக்கும், ரத்தத்தில் குளுக்கோசின் அளவையும் கட்டுபடுத்தும் என தெரிய வந்துள்ளது.
பீன்சில் சோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்த்தாதுக்கள் நிறைய இருக்கின்றன. இவை டெய்டுஜின் மற்றும் இகுவோல் டெய்டுஜின் என்னும் இரண்டு துணை மூலக்கூறுகளை அடக்கியது. இவை இரண்டும் கொழுப்புடன் வினைபுரியும் தன்மை உடையது. ஆய்வின் போது பீன்ஸ் உணவுகளில் சோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்த்தாதுக்கள் நிறைந்திருப்பது தெரியவந்தது. இது நீரிழிவு நோயையும், மாரடைப்பின் தீவிரத்தையும் குறைக்கும் தன்மை உடையது. தொடர்ந்து சோயாபீன்ஸ் உணவுகளை சாப்பிட்டு வந்தால் அது கொழுப்பைக் குறைப்பதுடன் இரத்தத்தில் குளுக்கோசின் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது என
தெரியவந்துள்ளது.
Monday, 12 April 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment