Monday, 25 January 2010

டெம்பிளேட்டில் நமக்கு தேவையான வார்தைகளை எளிதாக தேடுவது எப்படி?

இணைய தளத்திலுள்ள பல திரட்டிகளிலும் ஓட்டுப்பட்டை அல்லது கவுன்டர் பட்டை அல்லது நெவிகேசன் விட்ஜெட்டை இணைக்க சில கோடுகளை தந்து இந்த வார்த்தைகளுக்கு பக்கத்தில் இணைக்கவும் என்று சொல்வார்கள். சில சமயங்களில் நாமே கூட டெம்ப்ளேட்டை திருத்த அதில் உள்ள வார்த்தைகளை தேட வேண்டி வரும். அப்போது ரெம்ப சிரமபட்டு ஒவ்வொரு வார்த்தையாக தேடி கண்டுபிடிப்போம். இதுக்கு ஈசியான வழி ஒன்று இருக்கு.


1. பிளாக்கினுள் Dashboard போகனும் அதில் Layout ஐ கிளிக் செய்யனும்
2.அதல் Edit HTML என்று இருக்கும் அதை கிளிக் பண்ணனும்
3. Expand Widget Templates பக்கத்தில் ஒரு செக் பாக்ஸ் இருக்கும் அதில் டிக் செய்யனும்
4.இப்போது Ctrl+F அழுத்தனும். இப்போது கீழே உள்ள படத்தில் உள்ளவாறு டெம்பிளேட்டுக்கு கீழே ஒரு பார் வந்திருக்கும்.




5. அந்த பாரில் நமக்கு தேவையான வார்த்தையை அடிக்க வேண்டும். அப்பறம் என்டர் கீயை தட்டவும். இப்போது நாம் தேடிய வரி மட்டும் தனி கலரில் தெளிவாக டெம்பிளேட்டில் தெரியும்.(படத்தில் பச்சை கலரில் தெரிவதை பாருங்கள்). இனிமேல் இதுக்கு ப்ககத்தில் எந்த கோடை சேர்க்க வேண்டுமோ அதை சேர்க்கலாம்.

0 comments:

Post a Comment